/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/168_10.jpg)
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும் பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான நடிகர் கிருஷ்ணாதிரைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக பயணித்து கிட்டத்தட்ட 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
கிருஷ்ணாவின்உடல் நலம் குறித்து அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், "கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக இன்று (14.11.2022) அதிகாலை 1.15 மணிக்குஅவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனே மருத்துவர்கள் அவரை சோதித்து ஐசியூ-வில் மாற்றி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்." எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இக்கட்டான சூழ்நிலையில் அவர் உள்ளதாகவும் மருத்துவக் குழு அவரது உடலைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், கிருஷ்ணாவின் உடல்நலம் தற்போது தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் பூரண குணமடைய திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ்பாபு கடந்த ஜனவரி மாதமும் தாயார் இந்திராதேவி கடந்த செப்டம்பர் மாதமும் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)